திஸ்ஸ வாவி

திஸ்ஸ வாவி

tissa lake

திஸ்ஸ வாவி என்பது திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் காணப்படும் ஒரு குளமாகும். திஸ்ஸ வாவி 3 ஆம் நூற்றண்டில் றுஹுணையில் ஆட்சி செய்த மகாநாக மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அதன் பின்னர் 1871 இல் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்ட திஸ்ஸ வாவி இன்று 652 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. திஸ்ஸமஹாரா பிரதேசத்தில் பாரிய அளவிலான வயல் நிலங்களுக்கு நீர் வழங்கும் திஸ்ஸ வாவி திஸ்ஸமஹாராம பிரதேச மக்களின் பெறுமதி மிக்க சொத்தாகக் கருதப்படுகிறது. திஸ்ஸ வாவியின் குளக் கட்டு மிக அழகான முறையில்நில அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், குளக் கட்டில் காணப்படும் பாரிய மரங்கள் பெருமிதத்தைச் சேர்க்கின்றன. எப்போதும் மக்கள் நிரம்பி வழியும் திஸ்ஸ வாவி நீராடுவதற்கு பிரசித்தமான ஒரு இடமாகும்.

 

பிப்ரவரி 17th, 2023