கிரிந்த விகாரை என்பது இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து தென்படும் தூரத்தில் உள்ள மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்ட விகாரையாகும். அதனைச் சூழ கடற்கரை, கடல், மணல் குன்றுகள், மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பல அழகிய இடங்களை கண்டு களிக்கலாம்.
Advertisement !
கிரிந்த விகாரை என்பது இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து தென்படும் தூரத்தில் உள்ள மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்ட விகாரையாகும். அதனைச் சூழ கடற்கரை, கடல், மணல் குன்றுகள், மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பல அழகிய இடங்களை கண்டு களிக்கலாம்.
திஸ்ஸ வாவி என்பது திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் காணப்படும் ஒரு குளமாகும். திஸ்ஸ வாவி 3 ஆம் நூற்றண்டில் றுஹுணையில் ஆட்சி செய்த மகாநாக மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அதன் பின்னர் 1871 இல் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்ட திஸ்ஸ வாவி இன்று 652 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. திஸ்ஸமஹாரா பிரதேசத்தில் பாரிய அளவிலான வயல் நிலங்களுக்கு நீர் வழங்கும் திஸ்ஸ வாவி திஸ்ஸமஹாராம பிரதேச மக்களின் பெறுமதி மிக்க சொத்தாகக் கருதப்படுகிறது. திஸ்ஸ வாவியின் குளக் கட்டு மிக அழகான முறையில்நில அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், குளக் கட்டில் காணப்படும் பாரிய மரங்கள் பெருமிதத்தைச் சேர்க்கின்றன. எப்போதும் மக்கள் நிரம்பி வழியும் திஸ்ஸ வாவி நீராடுவதற்கு பிரசித்தமான ஒரு இடமாகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே றுஹுண பிரதேசம் மனிதர்களின் வாழிடமாக இருந்தது என்பதற்கான சான்றுகள் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ளன. அவ்வாறே றுஹுண பிரதேத்தில் கி. மு ஆறாம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையின் முக்கிய குடியேற்றங்கள் காணப்பட்டது என்பதற்கான சான்றுகள் புராணக் கதைகளில் உள்ளன. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது அவர் திஸ்ஸமஹாராமவுக்கு விஜயம் செய்துள்ளதாக தாதுவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாநம்பியதிஸ்ஸ மன்னன் அறுபது வெள்ளரசு மரக் கிளைகளை திஸ்ஸமஹாராமவில் நட்டதாக போதி வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள திஸ்ஸமஹாராமவில் அமைந்துள்ளது. இவ்விகாரை கி. மு இரண்டாம் நூற்றாண்டில் றுஹுணு காவன்திஸ்ஸ மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமி புத்தரின் பாதம் பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.
திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரை வளவில் நிர்மணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரம், இலங்கையில் உள்ள மிகப்பெரிய தாதுகோபுரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இது நீர்க் குமிழி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.