களியாட்ட வரிக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் i ஆவது உப பிரிவின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் திஸ்ஸமஹாராம பிரதேச சபையின் நிர்வாகப் பிரதேசத்தினுள் நடாத்தப்படும் களியாட்ட நிகழ்வு ஒன்றில் பிரவேசிப்பதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தில் பின்வரும் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக களியாட்ட வரியை அறவிடல்.
- ரசிகர்களிடம் பணம் அறவிட்டு காட்சிப்படுத்தப்படும் திரைப்படக் காட்சி ஒன்றுக்கு ஏழு தசம் ஐந்து வீத (7.5%) களியாட்ட வரியை விதித்தல்.
- பணம் அறவிட்டு நடத்தப்படும் இசைக் கச்சேரி அல்லது வேறு ஏதேனும் ஒரு களியாட்ட நிகழ்வுக்கு இருபது வீத (20%) களியாட்ட வரியை விதித்தல்.