கைத்தொழில் உரிமையாளர்களே!
உங்கள் கைத்தொழிலுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளீர்களா?
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்றால் என்ன?
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பது
கைத்தொழிலாளர்களால் தம்முடைய கைத்தொழில் செயற்படுகள் சூழல் நேய முறையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பில் உத்தவாதம் வழங்கும் நிறுவனத்திற்கும் கைத்தொழிலாளருக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் சட்ட ரீதியான தொடர்பைக் காட்டும் ஆவணமாகும். அத்தோடு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திர முறைமையானது இலங்கையின் இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரதான சட்ட ரீதியான மூலோபயமாகும். கைத்தொழில் நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திர முறைமை பயன்படுத்தப்படுகிறது. சூழலுக்கும் அபிவிருத்திக்கும் இடையில் சமநிலையை உருவாக்க இதன் மூலம் ஆற்றப்படும் பணி அளப்பறியது.
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இல்லாமல் கைத்தொழில் ஒன்றை நடாத்திச் செல்வதும் அதன் மூலம் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் தேவைப்படுகளுக்கு இயைபில்லாத முறையில் கழிவுகளை சூழலில் விடுவித்தல், வைப்புச் செய்தல், அகற்றுதல் என்பன 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டத் திருத்தங்கள் மூலம் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கத் தக்க குற்றமாகும்.
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள்.
- பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- காணி உறுதியின் பிரதி
- அங்கீகரிக்கப்பட்ட காணி வரைபடத்தின் பிரதி.
- அங்கீகரிக்கப்பட்ட கட்டட அனுமதிப் பத்திரத்தின் பிரதி.
- தொழிற்சால நிலத்திற்கு பிரவேசிக்கும் பாதையைக் காட்டும் படம்.
- கட்டட இயைபுச் சான்றிதழின் பிரதி.
- குறித்த ஆண்டு வணிக அனுமதிப் பத்திரத்தின் பிரதி
- தொழிற்சாலை செயற்பாட்டின் ஓசை/ வாசம்/ அசுத்த நீர் / மாசுப் பொருட்களில் இருந்து சுற்றாடலைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்.
உங்களால் உரிய பரிசோதனைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விண்ணப்பத்தினை பிரதேச சபையில் ஒப்படைத்த பின்னர், பரிசோதனைக் குழுவினால் தொழிற்சாலையை பரிசோதனை செய்து பார்த்து, அதன் அறிக்கையை சுற்றாடல் அனுமதிப் பத்திரம் தொடர்பான தொழில் நுட்பக் குழுவுக்கு வழங்கப்பட்டு அனுமதி பெற்ற பின்னர், உங்களுக்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதிப் பத்திரக் கட்டணம் 03 ஆண்டுகளுக்கு 4000/= என்பதுடன் 400/= முத்திரைக் கட்டணமும் அறவிடப்படும். உங்கள் சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட காலம் முடிவடைய மூன்று மாதங்களுக்கு முன்னர் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக பிரதேச சபைக்குவிண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறில்லாத விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணத்துக்கு மேலதிகமாக பரிசோதனைக் கட்டணம் ஒன்றையும் செலுத்த வேண்டி ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
“சகல மனித நடவடிக்கைகளும் எம்மால் சட்ட திட்டங்கள் விதிக்கப்படுவது நாங்கள் வாழும் சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்குமாகும்.”
திஸ்ஸமஹாராம பிரதேச அரசாங்க சபை