வணிக அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடுதல். 2023 ஆம் ஆண்டு

வணிக அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடுதல். 2023 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கம் கொண்ட பிரதேச சபைகள் சட்டத்தின் 147 (1) பிரிவின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தின் 149 ஆம் பிரிவின் அடிப்படையில் 04/10/2017 ஆம் திகதி இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலக்கம் 234 தீர்மானத்தினை ஏற்று, 09/06/2017 ஆம் திகதி 2023 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க (ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் I ஆவது உப பிரிவின் அடிப்படையில் பொறுப்பான அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள உப சட்டங்களின் அடிப்படையிலும், அதி விஷேட வர்த்தமானி இலக்கம் 570/7 23/08/1988 திகதியுடைய வர்த்தமானியின் அடிப்படையிலும் அங்கீகாரம் வழங்கப்பட்ட சட்டத்தின் 39 ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்காக அந்த இடங்களில் பின்வரும் விடயங்களின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்கும், அதற்கென கீழ்வரும் உப பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை அறவிடல்.

அ ) இடத்தின் வருடாந்த பெறுமதி

ஆ ) குறித்த வணிகத்தின் புரள்வு

இ ) குறித்த வணிகம் ஈட்டிக் கொள்ளத் தக்க இலாபம்

ஈ ) குறித்த வணிகம் விநியோகம் செய்யும் பொருட்கள் அல்லது சேவையின் அத்தியாவசியத் தன்மை.

 

வணிகத்தின் தன்மை வருடாந்த பெறுமதி ரூ 750 க்கு குறைவான வருடாந்த பெறுமதி ரூ 750க்கும் ரூ 1500 க்கும் இடைப்பட்ட வருடாந்த பெறுமதி ரூ 1500 க்கு மேற்பட்ட
01 மீன் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
02 இறைச்சி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
03 குளிர் பான உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
04 முடி திருத்தும் இடம், அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
05 வெதுப்பகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
06 பாலுற்பத்தி பண்ணை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
07 நீச்சல் தடாகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
08 ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
09 சாப்பாட்டுக் கடை, சிற்றுண்டிச்சாலை, தேநீர் அல்லது கோப்பி கடை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
10 ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
11 தங்குமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
12 லோண்டரி ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
13 தொழிற்சாலை 500.00 750.00 1000.00
14 ஈமச் சடங்கு சேவைகள் வழங்குதல் 500.00 750.00 1000.00
15 நடமாடும் வணிகர்களால் உணவுப். பொருட்கள் விற்பனை செய்தல் 500.00 750.00 1000.00
16 நிர்மாணக் கைத்தொழிலுடன் தொடர்பான தொழிற்சாலைகள், நிர்மாணத்திற்கான பொருட்கள். களஞ்சியங்கள்.

  1. சிமெந்து விற்பனை செய்தல்.
  2. கருங்கல், கருங்கல் தூள் விற்பனை செய்தல்
  3. மணல், கிறவள் மண் விற்பனை செய்தல்.
  4. செங்கற்கள் விற்பனை செய்தல்.
500.00 750.00 1000.00
17 அழகற்ற அல்லது ஆபத்தான வணிகங்கள்.

  1. கபொக், கிரவள், அல்லது கருங்கல் குழி ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  2. கருங்கல் அரைக்கும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  3. அரிசி ஆலை அல்லது தனியங்கள், சரக்குகளை அரைக்கும் ஆலை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  4. தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்திச் செல்லுதல்
  5. வாகனங்களுக்கான சேவை வழங்கும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் (சேர்விஸ் சென்டர்)
  6. மர ஆலை அல்லது தச்சு மடுவம் ஒன்றை நடத்திச் செல்லுதல்
  7. எரிவாயு களஞ்சியப்படுத்தி வைத்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  8. மாட்டுப் பண்ணை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  9. அறுப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  10. எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  11. கொள்ளன் பட்டறை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  12. சீனி, மா, வெங்காயம் போன்ற பொருட்களை மொத்தமாக (15 ஹோண்டர் க்கு மேற்பட்ட) களஞ்சியப்படுத்தல் அல்லது விற்பனை செய்தல்.
  13. மொத்தமாக விற்பனை செய்வதற்காக பழுதடையக் கூடிய சிறு உணவுப் பொருட்களை விற்பனை செய்தல்.
  14. இரும்பு ஒட்டு (வெல்டிங்) வேலைத்தளம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  15. தனிய வகைகள், உணவு சுவையூட்டி சரக்குகளை விற்பனை செய்தல்.
  16. குளிர் சாதனப் பெட்டி திருத்துமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  17. மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சைக்கிள் திருத்துமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  18. விலங்குணவுகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  19. குளிர் பானங்களை விற்பனை செய்தல்.
  20. தயிர், பால் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  21. இனிப்புப் பண்டங்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  22. பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகளை விற்பனை செய்தல்.
  23. உலருணவுகளை பொதி செய்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  24. பட்டறை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
500.00 750.00 1000.00

Get In Touch