வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே றுஹுண பிரதேசம் மனிதர்களின் வாழிடமாக இருந்தது என்பதற்கான சான்றுகள் ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ளன. அவ்வாறே றுஹுண பிரதேத்தில் கி. மு ஆறாம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையின் முக்கிய குடியேற்றங்கள் காணப்பட்டது என்பதற்கான சான்றுகள் புராணக் கதைகளில் உள்ளன. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயத்தின் போது அவர் திஸ்ஸமஹாராமவுக்கு விஜயம் செய்துள்ளதாக தாதுவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாநம்பியதிஸ்ஸ மன்னன் அறுபது வெள்ளரசு மரக் கிளைகளை திஸ்ஸமஹாராமவில் நட்டதாக போதி வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.