இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள திஸ்ஸமஹாராமவில் அமைந்துள்ளது. இவ்விகாரை கி. மு இரண்டாம் நூற்றாண்டில் றுஹுணு காவன்திஸ்ஸ மன்னனால் கட்டுவிக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமி புத்தரின் பாதம் பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.
திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரை வளவில் நிர்மணிக்கப்பட்டுள்ள தாதுகோபுரம், இலங்கையில் உள்ள மிகப்பெரிய தாதுகோபுரங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இது நீர்க் குமிழி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.