சேதனப் பசளை விற்பனைக் கட்டணம் அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான கொம்போஸ்ட் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையை விற்பனை செய்யும்போது பின்வரும் அடிப்படையில் கட்டணங்களை அறவிட கெளரவ சபைக்கு நான் பிரேரிக்கிறேன்.

திருத்தப்பட்ட கட்டணம்
சேதனப் பசளை ஒரு கிலோ கிராம் (1Kg) ரூ. 25.00
உரைக்காக 50kg ரூ. 40.00
25kg ரூ. 30.00

 

மலசல கூடங்கள், குளியல் இடங்களுக்கான கட்டணங்களை அறவிடுதல் – 2023 ஆம் ஆண்டு

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான மலசல கூடங்கள் மற்றும் குளியல் இடங்கள் தொடர்பில் பின்வரும் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கு கட்டணம் அறவிடப்படும்.

தொடர் இல இடம் கட்டணம்
01 கிரிந்த புனித நகர பழைய மற்றும் புதிய மலசல கூடங்கள்  ஒரு நபரிடமிருந்து ரூ. 20/= அறவிடப்படும்
02 கிரிந்த கடற்கரை மலசல கூடம் 
03 திஸ்ஸ புனித பூமி மலசல கூடம் 
04 பண்ணேகமுவ பொது மலசல கூடம் 
05 திஸ்ஸ பஸ் தரிப்பிட மலசல கூடம் 
06 அக்குருகொட சந்தி மலசல கூடம்.
07 தெபரவெவ பொதுச் சந்தை மலசல கூடம் 
08 கிரிந்த கடற்கரையின் குளியல் இடத்திற்காக ஒரு நபரிடமிருந்து ரூ. 30/= அறவிடப்படும்

 

மலசல கழிவகற்றல் வண்டிச் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கான கட்டணம் அறவிடல் -2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான மலசல கழிவகற்றல் வண்டிச் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு பின்வருமாறு 2023 ஆம் ஆண்டுக்கு கட்டணம் அறவிடப்படும்.

தொடர் இல  கட்டணம் 
I ஒரு பவுசர் அகற்றுதல்

திஸ்ஸமஹாராம பிரதேசத்தினுள் குடியிருப்பு இடங்கள் 

ரூ. 3,000.00
II திஸ்ஸமஹாராம பிரதேசத்திதினுள் உள்ள வணிக இடம் ஒன்றில் ஒரு பவுசர் அகற்றுவதற்கு  ரூ. 5,000.00
III திஸ்ஸமஹாராம பிரதேசத்திற்கு வெளியே வணிக அல்லது குடியிருப்பு இடம் ஒன்றில் ஒரு பவுசர் அகற்றுவதற்கு  ரூ. 5,500.00
IV மேலதிகமாக அகற்றும் ஒரு பவுசருக்கு – குடியிருப்பு  ரூ.  2,000.00
வணிக இடம்  ரூ. 3,000.00
V போக்குவரத்து கட்டணம் – முதலாவது 30 கிலோ மீட்டர்களுக்கு  ரூ. 3,225.00
VI 30  கிலோ மீட்டர்களுக்கு மேற்படும் ஒவ்வொரு கிலோ மீட்டர்களுக்கும் கிலோ மீட்டர் ஒன்றுக்கு  ரூ. 120.00
VII கழிவுகளை அப்புறப்படுத்த இடம் பெற்றுத் தராத சந்தர்ப்பத்தில்  ரூ. 1,000.00

 

நீர் கொள்கலன் வண்டி சேவைக்கான கட்டணம்

6000 (60001) லிட்டர் நீர் கொள்கலன் வண்டியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்தை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான 6000 (60001) லிட்டர் நீர் கொள்கலன் வண்டியின் சேவையைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில், பின்வருமாறு 2023 ஆம் ஆண்டில் கட்டணம் அறவிடப்படும்.

கட்டணம்
முதலாவது கிலோ மீட்டரில் இருந்து 30 ஆவது கிலோ மீட்டர் வரை  ரூ. 3,500.00
முதலாவது 30 கிலோ மீட்டரின் பின்னர் மேலதிகமாக செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும்  ரூ. 120.00

 

8000 (80001) லிட்டர் நீர் கொள்கலன் வண்டியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணத்தை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான 8000 (80001) லிட்டர் நீர் கொள்கலன் வண்டியின் சேவையைப் (தீயணைப்புக்கு பொருத்தமானவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது) பெற்றுக் கொடுப்பது தொடர்பில், பின்வருமாறு 2023 ஆம் ஆண்டில் கட்டணம் அறவிடப்படும்.

கட்டணம்
அதிகாரப் பிரதேசத்தினுள் நீர் கொள்கலன் வண்டியைப் ஐப் பெற்றுக் கொடுத்தல் ( நாள் ஒன்றுக்கு ) ரூ. 15,000.00
அதிகாரப் பிரதேசத்திற்கு  வெளியே நீர் கொள்கலன் வண்டியைப் ஐப் பெற்றுக் கொடுத்தல் ( நாள் ஒன்றுக்கு ) ரூ. 20,000.00

திருத்தப்பட்ட பகுதி

மேலதிக நீர் கொள்கலன் வண்டிகளைப் பெற்றுக் கொள்வதாயின்:

  • ஒரு நீர் தாங்கிக் கொள்கலன் வண்டிக்கு ரூ. 250.00 வீதம் மற்றும் கிலோ மீட்டர் 1 இல் இருந்து 50 ஆவது கிலோ மீட்டர் வரை     ரூ. 1,000.00
  • 50 கிலோ மீட்டர்க்கு மேற்பட்ட ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 120.00

 

வாகனங்களை வாடகைக்கு வழங்குவதற்கான கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் பின்வரும் அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும்.

தொடர் இலக்கம் வாகன வகை  கட்டணம் 
01. மோட்டார் க்ரேடர்  ரூ. 8,000.00ஒரு மீட்டர் மணித்தியாலத்திற்கு 
02. பெக்கோ இயந்திரம்  ரூ. 5,500.00 ஒரு மீட்டர் மணித்தியாலத்திற்கு
03. 08-10 டன் கொண்ட வைப்ரேடிங் இயந்திரம்  ரூ. 5,500.00 ஒரு மீட்டர் மணித்தியாலத்திற்கு
04. 2½ கியூப் டிப்பர் வண்டி  ரூ. 18,000.00 நாள் ஒன்றுக்கு 

 

கழிவகற்றுவதற்கான கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

கழிவகற்றுவதற்கான கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

கட்டணம் 
4 அறைகள் அல்லது அதனை விடக் குறைவான இடம் நாள் ஒன்றுக்கு  ரூ. 650.00
05 – 10 அறைகள் நாள் ஒன்றுக்கு  ரூ. 800.00
11 – 15 அறைகள் நாள் ஒன்றுக்கு  ரூ. 900.00
16 – 20 அறைகள் நாள் ஒன்றுக்கு  ரூ. 1000.00
21 – 25 அறைகள் நாள் ஒன்றுக்கு  ரூ. 1,250.00
26 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் நாள் ஒன்றுக்கு  ரூ. 2,000.00
வேறு வணிக நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு  ரூ. 750.00

குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கழிவகற்றும் சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

 

 

மஹசென்புர தகனச்சாலையில் பிரேதம் ஒன்றை தகனம் செய்வதற்கான கட்டணம் அறவிடல் – 2023 ஆம் ஆண்டு

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான திஸ்ஸமஹாராம மஹசென்புர தகனச்சாலையில் பிரேதம் ஒன்றை தகனம் செய்வதற்கான கட்டணம் அறவிடல்.

  • திஸ்ஸமஹாராம பிரதேச சபை அதிகார எல்லைக்குள் உள்ள பிரேதம் ஒன்றை தகனம் செய்வதற்கான கட்டணம்      ரூ. 18,400.00
  • திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்கு அதிகார எல்லைக்கு வெளியே உள்ள ஒருவரின் பிரேதம் ஒன்றைத் தகனம் செய்வதற்கான கட்டணம்   ரூ. 20,000.00.

 

வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான திஸ்ஸமஹாராம புண்ணிய பூமி வாகனத் தரிப்பிடம் மற்றும்கிரிந்த வாகனத் தரிப்பிடம் ஆகியவற்றுக்கு பின்வருமாறு 2023 ஆம் ஆண்டுக்கு கட்டணம் அறவிடல்.

  • திஸ்ஸமஹாராம புண்ணிய பூமி வாகனத் தரிப்பிடம்.
    கட்டணம்
    லொறி மற்றும் பேருந்துகள்  ரூ. 100.00
    வேன் வண்டிகள்  ரூ. 80.00
    கார்கள்  ரூ. 50.00
    முச்சக்கர வண்டிகள்  ரூ.30.00
  • கிரிந்த வாகனத் தரிப்பிடத்திற்கு
    கட்டணம்
    லொறி மற்றும் பேருந்துகள்  ரூ. 100.00
    வேன் வண்டிகள்  ரூ. 80.00
    கார்கள்  ரூ. 50.00
    முச்சக்கர வண்டிகள்  ரூ.30.00

 

களியாட்ட வரி அறவிடல் – 2023 ஆம் ஆண்டுக்காக

களியாட்ட வரிக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் i ஆவது உப பிரிவின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் திஸ்ஸமஹாராம பிரதேச சபையின் நிர்வாகப் பிரதேசத்தினுள் நடாத்தப்படும் களியாட்ட நிகழ்வு ஒன்றில் பிரவேசிப்பதற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தில் பின்வரும் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக களியாட்ட வரியை அறவிடல்.

  • ரசிகர்களிடம் பணம் அறவிட்டு காட்சிப்படுத்தப்படும் திரைப்படக் காட்சி ஒன்றுக்கு ஏழு தசம் ஐந்து வீத (7.5%) களியாட்ட வரியை விதித்தல்.
  • பணம் அறவிட்டு நடத்தப்படும் இசைக் கச்சேரி அல்லது வேறு ஏதேனும் ஒரு களியாட்ட நிகழ்வுக்கு இருபது வீத (20%) களியாட்ட வரியை விதித்தல்.

 

அறிவித்தல் பலகைகளுக்கான கட்டணம் அறவிடல் – 2023 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 122 மற்றும் 126 VII ஊ பபிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் 23.08.1988 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 527/7 இலக்கம் கொண்ட அதி விஷேட வர்த்தமானியின் iv (ஆ) பிரிவினால் பகிரங்கப்படுத்தப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க உள்ளூராட்சி அமைப்புக்கள் (துணைச் சட்டத்தின்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆவது உப. பிரிவின் அடிப்படையில், பொறுப்பான அமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள துணைச் சட்டத் தொகுப்பின் 39 ஆவது துணைச் சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கு அதிகாரப். பிரதேசத்தினுள் காட்சிப்படுத்தப்படும் விளம்பரப் பதாதைகளுக்காக பின்வரும் நியமங்களின் அடிப்படையில் கட்டணங்களை அறவிடல்.

    • நடப்பாண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சுவர் ஒன்றில் அல்லது பதாகை ஒன்றில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார விளம்பரம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 100.00 என்ற அடிப்படையிலான கட்டணம்.
    • துணி அல்லது பொலித்தின் ஐப். பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விளம்பரம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 30.00 வீதமான கட்டணம்
    • கடதாசியின் அச்சிடப்பட்ட விளம்பரம் ஒன்றை மாதம் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதி ஒன்றுக்கு காட்சிப்படுத்துவதற்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 5.00 வீதமான கட்டணம்.
    • நடைமுறை ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சுவர் ஒன்றில் அல்லது பதாகை ஒன்றில் கட்சிப்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பரப் பதாகை ஒன்றுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 1500.00 வீதம் கட்டணம் அறவிடல்.