கைத்தொழில் அனுமதிப் பத்திரம்

கைத்தொழில் உரிமையாளர்களே!
உங்கள் கைத்தொழிலுக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளீர்களா?

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்றால் என்ன?
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பது
கைத்தொழிலாளர்களால் தம்முடைய கைத்தொழில் செயற்படுகள் சூழல் நேய முறையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பில் உத்தவாதம் வழங்கும் நிறுவனத்திற்கும் கைத்தொழிலாளருக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் சட்ட ரீதியான தொடர்பைக் காட்டும் ஆவணமாகும். அத்தோடு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திர முறைமையானது இலங்கையின் இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரதான சட்ட ரீதியான மூலோபயமாகும். கைத்தொழில் நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திர முறைமை பயன்படுத்தப்படுகிறது. சூழலுக்கும் அபிவிருத்திக்கும் இடையில் சமநிலையை உருவாக்க இதன் மூலம் ஆற்றப்படும் பணி அளப்பறியது.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் இல்லாமல் கைத்தொழில் ஒன்றை நடாத்திச் செல்வதும் அதன் மூலம் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் தேவைப்படுகளுக்கு இயைபில்லாத முறையில் கழிவுகளை சூழலில் விடுவித்தல், வைப்புச் செய்தல், அகற்றுதல் என்பன 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க மற்றும் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டத் திருத்தங்கள் மூலம் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கத் தக்க குற்றமாகும்.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள்.

  • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  • காணி உறுதியின் பிரதி
  • அங்கீகரிக்கப்பட்ட காணி வரைபடத்தின் பிரதி.
  • அங்கீகரிக்கப்பட்ட கட்டட அனுமதிப் பத்திரத்தின் பிரதி.
  • தொழிற்சால நிலத்திற்கு பிரவேசிக்கும் பாதையைக் காட்டும் படம்.
  • கட்டட இயைபுச் சான்றிதழின் பிரதி.
  • குறித்த ஆண்டு வணிக அனுமதிப் பத்திரத்தின் பிரதி
  • தொழிற்சாலை செயற்பாட்டின் ஓசை/ வாசம்/ அசுத்த நீர் / மாசுப் பொருட்களில் இருந்து சுற்றாடலைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்.

உங்களால் உரிய பரிசோதனைக் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் விண்ணப்பத்தினை பிரதேச சபையில் ஒப்படைத்த பின்னர், பரிசோதனைக் குழுவினால் தொழிற்சாலையை பரிசோதனை செய்து பார்த்து, அதன் அறிக்கையை சுற்றாடல் அனுமதிப் பத்திரம் தொடர்பான தொழில் நுட்பக் குழுவுக்கு வழங்கப்பட்டு அனுமதி பெற்ற பின்னர், உங்களுக்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதிப் பத்திரக் கட்டணம் 03 ஆண்டுகளுக்கு 4000/= என்பதுடன் 400/= முத்திரைக் கட்டணமும் அறவிடப்படும். உங்கள் சுற்றாடல் அனுமதிப் பத்திரத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட காலம் முடிவடைய மூன்று மாதங்களுக்கு முன்னர் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக பிரதேச சபைக்குவிண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறில்லாத விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணத்துக்கு மேலதிகமாக பரிசோதனைக் கட்டணம் ஒன்றையும் செலுத்த வேண்டி ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

“சகல மனித நடவடிக்கைகளும் எம்மால் சட்ட திட்டங்கள் விதிக்கப்படுவது நாங்கள் வாழும் சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்குமாகும்.”

திஸ்ஸமஹாராம பிரதேச அரசாங்க சபை

இறைவரி அறவிடுதல் – 2023 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் 146(1) உப பிரிவின் அடிப்படையில் திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 392/20 ஆம் இலக்கம் கொண்ட, 04/03/1983 ஆம் திகதியுடைய அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தினுள் அபிவிருத்தி செய்யத் தக்க பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களினுள் காணப்படும் வீடுகளில், கட்டடங்களில், காணிகளின் பெறுமதியில் 2007 ஆம் ஆண்டுக்காகவும் நடைமுறை ஆண்டு 2023 க்காகவும் நிறைவேற்றக் கொள்ளப்பட வேண்டும் எனவும், அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் 134(1) உப பிரிவினால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மேற்படி சொத்துக்களின் மீது மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுக்கு வருடாந்த பெறுமதியில் 7% ஆன இறைவரி ஒன்றை விதித்து அறவிட வேண்டும் என்றும்,

மேலும் 2023 ஆம் ஆண்டில் பின்வரும் ஒவ்வொரு காலாண்டிற்கும் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் இறைவரியினை திஸ்ஸமஹாராம பிரதேச சபை நிதியத்துக்கு செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு வருடாந்த இறைவரியினை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னர் செலுத்தினால், வருடாந்த இறைவரிக் கட்டணத்தில் 10% கழிவும், அந்த உப பட்டியலில் ஒவ்வொரு காலாண்டுக்கும் 3 ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் இறைவரித் தொகையை பிரதேச சபை நிதியத்தில் செலுத்துவதன் மூலம் குறித்த காலாண்டுக்கு உரிய தொகையில் 5% கழிவையும் திஸ்ஸமஹாராம பிரதேச சபை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

காலாண்டு செலுத்தப்பட வேண்டிய திகதி 5% கழிவுக்கு உரித்தான இறுதித் திகதி
முதலாம் காலாண்டு  31/03/2023 31/01/2023
இரண்டாம் காலாண்டு  30/062023 30/04/2023
மூன்றாம் காலாண்டு  30/09/3023 31/07/2023
நான்காம் காலாண்டு 31/12/2023 31/10/2023

 

பதிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து 1% கட்டணமாக அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 149ஆம் பிரிவினாலும் 09/06/2017 ஆம் திகதி 2023 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க (ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் I ஆம் உப பிரிவின் அடிப்படையில் அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் 13, 14 ஆம் பிரிவுகளின் பிரகாரம் காட்டப்பட்டுள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்களில் இருந்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வணிக அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்காக அந்த இடத்தில் நடைமுறை ஆண்டுக்கு முந்திய ஆண்டின் வருமானத்தில் 1% ஐ அறவிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான வணிக அனுமதிப் பத்திரத்தை வழங்குதல்.

கைத்தொழில் வரிகளை அறவிடல் 2023.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கம் கொண்ட பிரதேச சபைகள் சட்டத்தின் 147 (1) பிரிவின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்தந்த இடங்களின் வருடாந்த பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் உப பட்டியலில் குறிப்பிட்டுள்ள தன்மையினாலான கைத்தொழில்களில் இருந்து உப. பட்டியலில் காட்டப்பட்டுள்ள அடிப்படையில் வணிக வரி ஒன்றை 2023 ஆம் ஆண்டுக்காக அறவிடல்.

தொடர் இல வரியின் தன்மை வருடாந்த பெறுமதி ரூ 750.00 க்கு குறைவான  வருடாந்த பெறுமதி ரூ 750.00 க்கும் ரூ 1500.00 க்கும் இடைப்பட்ட  வருடாந்த பெறுமதி ரூ 1500.00 க்கு மேற்பட்ட 
01 மின்னுபகரணங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
02 பிளாஸ்டிக், கொடி அல்லது பொருட்கள் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
03 சுருட்டு உற்பத்தி செய்வதற்காக. 500.00 750.00 1000.00
04 பாணி உற்பத்தி செய்வதற்காக  500.00 750.00 1000.00
05 கள் திரட்டும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
06 பீடி உற்பத்தி செய்வதற்காக 500.00 750.00 1000.00
07 சுண்ணாம்பு உற்பத்தி செய்வதற்கான சூலை ஒன்றை ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
08 ஒட்டுப் பசை (கம்) உற்பத்தி செய்தல்  500.00 750.00 1000.00
09 இயந்திரங்கள் மூலம் செங்கற்கள் அல்லது கூரை ஓடுகளை உற்பத்தி செய்தல் மற்றும் சுடல். 500.00 750.00 1000.00
10 விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
11 எண்ணெய் ஆலை ஒன்றை நடத்திச் செல்லுதல். 500.00 750.00 1000.00
12 கடதாசி உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை ஒன்றை நடத்திச் செல்லுதலும் களஞ்சியம் ஒன்றை ஒன்றை நடத்திச் செல்லுதலும்.  500.00 750.00 1000.00
13 தும்பு அல்லது நார் வகைகளை உற்பத்தி செய்தல் அல்லது தும்பு நார் என்பவற்றைப் பயன்படுத்திய உற்பத்திகளைச் செய்தல். 500.00 750.00 1000.00
14 இயந்திரம் இன்றி செங்கற்கள் அல்லது கூரை ஓடுகளை உற்பத்தி செய்தல். 500.00 750.00 1000.00
15 இயந்திரங்களைப் பயன்படுத்தி மெத்தைகளை உற்பத்தி செய்வதற்காக. 500.00 750.00 1000.00
16 இயந்திரங்களைக் கொண்டோ இயந்திரம் இன்றியோ சாப்பாத்துக்கள்,  பாதணிகளை உற்பத்தி செய்தல்.  500.00 750.00 1000.00
17 பாடசாலை பைகள், பிரயாணப் பைகளை உற்பத்தி செய்தல்.  500.00 750.00 1000.00
18 கருப்பட்டி தயாரிப்பு  500.00 750.00 1000.00
19 வெடி பொருட்கள், பட்டாசு தயாரிப்பு  500.00 750.00 1000.00
20 சவர்க்கார உற்பத்திக்காக  500.00 750.00 1000.00
21 தூரிகை உற்பத்தி  500.00 750.00 1000.00

வணிக அனுமதிப் பத்திரக் கட்டணம் அறவிடுதல். 2023 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கம் கொண்ட பிரதேச சபைகள் சட்டத்தின் 147 (1) பிரிவின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தின் 149 ஆம் பிரிவின் அடிப்படையில் 04/10/2017 ஆம் திகதி இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலக்கம் 234 தீர்மானத்தினை ஏற்று, 09/06/2017 ஆம் திகதி 2023 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க (ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் I ஆவது உப பிரிவின் அடிப்படையில் பொறுப்பான அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள உப சட்டங்களின் அடிப்படையிலும், அதி விஷேட வர்த்தமானி இலக்கம் 570/7 23/08/1988 திகதியுடைய வர்த்தமானியின் அடிப்படையிலும் அங்கீகாரம் வழங்கப்பட்ட சட்டத்தின் 39 ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்காக அந்த இடங்களில் பின்வரும் விடயங்களின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்கும், அதற்கென கீழ்வரும் உப பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை அறவிடல்.

அ ) இடத்தின் வருடாந்த பெறுமதி

ஆ ) குறித்த வணிகத்தின் புரள்வு

இ ) குறித்த வணிகம் ஈட்டிக் கொள்ளத் தக்க இலாபம்

ஈ ) குறித்த வணிகம் விநியோகம் செய்யும் பொருட்கள் அல்லது சேவையின் அத்தியாவசியத் தன்மை.

 

வணிகத்தின் தன்மை வருடாந்த பெறுமதி ரூ 750 க்கு குறைவான வருடாந்த பெறுமதி ரூ 750க்கும் ரூ 1500 க்கும் இடைப்பட்ட வருடாந்த பெறுமதி ரூ 1500 க்கு மேற்பட்ட
01 மீன் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
02 இறைச்சி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
03 குளிர் பான உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
04 முடி திருத்தும் இடம், அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
05 வெதுப்பகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
06 பாலுற்பத்தி பண்ணை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
07 நீச்சல் தடாகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
08 ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
09 சாப்பாட்டுக் கடை, சிற்றுண்டிச்சாலை, தேநீர் அல்லது கோப்பி கடை ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
10 ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
11 தங்குமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
12 லோண்டரி ஒன்றை நடத்திச் செல்லுதல் 500.00 750.00 1000.00
13 தொழிற்சாலை 500.00 750.00 1000.00
14 ஈமச் சடங்கு சேவைகள் வழங்குதல் 500.00 750.00 1000.00
15 நடமாடும் வணிகர்களால் உணவுப். பொருட்கள் விற்பனை செய்தல் 500.00 750.00 1000.00
16 நிர்மாணக் கைத்தொழிலுடன் தொடர்பான தொழிற்சாலைகள், நிர்மாணத்திற்கான பொருட்கள். களஞ்சியங்கள்.

  1. சிமெந்து விற்பனை செய்தல்.
  2. கருங்கல், கருங்கல் தூள் விற்பனை செய்தல்
  3. மணல், கிறவள் மண் விற்பனை செய்தல்.
  4. செங்கற்கள் விற்பனை செய்தல்.
500.00 750.00 1000.00
17 அழகற்ற அல்லது ஆபத்தான வணிகங்கள்.

  1. கபொக், கிரவள், அல்லது கருங்கல் குழி ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  2. கருங்கல் அரைக்கும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  3. அரிசி ஆலை அல்லது தனியங்கள், சரக்குகளை அரைக்கும் ஆலை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  4. தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்திச் செல்லுதல்
  5. வாகனங்களுக்கான சேவை வழங்கும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் (சேர்விஸ் சென்டர்)
  6. மர ஆலை அல்லது தச்சு மடுவம் ஒன்றை நடத்திச் செல்லுதல்
  7. எரிவாயு களஞ்சியப்படுத்தி வைத்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  8. மாட்டுப் பண்ணை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  9. அறுப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  10. எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  11. கொள்ளன் பட்டறை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  12. சீனி, மா, வெங்காயம் போன்ற பொருட்களை மொத்தமாக (15 ஹோண்டர் க்கு மேற்பட்ட) களஞ்சியப்படுத்தல் அல்லது விற்பனை செய்தல்.
  13. மொத்தமாக விற்பனை செய்வதற்காக பழுதடையக் கூடிய சிறு உணவுப் பொருட்களை விற்பனை செய்தல்.
  14. இரும்பு ஒட்டு (வெல்டிங்) வேலைத்தளம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  15. தனிய வகைகள், உணவு சுவையூட்டி சரக்குகளை விற்பனை செய்தல்.
  16. குளிர் சாதனப் பெட்டி திருத்துமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  17. மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சைக்கிள் திருத்துமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  18. விலங்குணவுகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  19. குளிர் பானங்களை விற்பனை செய்தல்.
  20. தயிர், பால் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  21. இனிப்புப் பண்டங்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  22. பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகளை விற்பனை செய்தல்.
  23. உலருணவுகளை பொதி செய்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.
  24. பட்டறை ஒன்றை நடத்திச் செல்லுதல்.
500.00 750.00 1000.00

வணிக வரி அறவிடல் – 2023

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 152 (I) பிரிவின் அடிப்படையில், சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது நிறைவேற்றக் கொள்ளப்பட்ட சட்டம் ஒன்றினால் கட்டுப்படுத்தப்படும் அனுமதிப் பத்திரம் ஒன்றின் கீழ் வராததும், அந்த சட்டத்தின் 150 ஆம் பிரிவின் கீழ் வரும் கைத்தொழில் வரிக்கு உட்படாததும் இடங்களைத் தவிர, ஏனைய உப பட்டியல் 1 ஆம் இலக்கத்தில் வணிகங்கள் தொடர்பில் கடந்து ஆண்டுக்கான வணிகத்தின் வருமானத்தின் அடிப்படையில் அட்டவணையில் காட்டப்படும் அளவுகளை தாண்டாத வகையலான அவுக்கு இயைபாக உப பட்டியல் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள அளவு வரியினை 2023 ஆம் ஆண்டுக்கான வரியாக அறவிடுதல்.

தொடர் இலக்கம் வரியின் தன்மை வருடாந்த வருமானம் 75,000/= ஐ விட குறைவாயின் வருடாந்த வருமானம் 150,000/= ஐ விட குறைவாயின் வருடாந்த வருமானம் 150,000/= ஐ விட அதிகமாயின்
01 மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
02 தளபாடப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
03 ஆடைகளை தைக்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
04 நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
05 பித்தளை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
06 அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
07 கைக்கடிகாரம் திருத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
08 மர உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
09 பாதணிகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
10 க்ரொசரி ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
11 இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
12 பயன்படுத்தப்பட்ட ஆடைகளை களஞ்சியப்படுத்தி வைக்கும், விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
13 வானொலி, தொலைக்காட்சிகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
14 துணி, ஆடைகள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
15 ஒலிப்பதிவு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
16 தையல் இயந்திரங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
17 சைக்கிள்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
18 சுதேச மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
19 ஆங்கில மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
20 காகிதாதிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள்  (பாடசாலை உபகாரணங்கள்) என்பவற்றை வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
21 புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
22 மட்பாண்டங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
23 பாக்கு, வெற்றிலை, புகையிலை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
24 மின் உபகரணங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
25 மதுபானம் மற்றும் வெளிநாட்டு பான வகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
26 தொலைபேசிகளை விற்பனை செய்யும், திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
27 நாற்று மேடை ஒன்றைப் பராமரித்தல் மற்றும் அலங்கார செடி வகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
28 விரைவு நிழற் பிரதிகளை பெற்றுக் கொடுக்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
29 தனியார் தொலைபேசிச்சேவையை வழங்கும் (கொமியுனிகேஷன்) நிலையம் ஒன்றை நடத்துதல். 360.00 1,200.00 3,000.00
30 தைத்த ஆடைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.  360.00 1,200.00 3,000.00
31 பாடல்களை ஒலிப்பதிவு செய்து விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
32 புகைப்படங்களுக்கு சட்டகம் பொறுத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
33 காகிதாதிகள், இறப்பர் முத்திரை தயாரித்தல், வாகன இலக்க தகட்டு ஓட்டுதல போன்றவற்றை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
35 விளையாட்டு மற்றும் சமூக நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
36 சிமெந்து கற்கள், பூச்சாடிகள் என்பவற்றை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல்.  360.00 1,200.00 3,000.00
37 அதிஷ்ட லாபச் சீட்டுக்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
38 டயர், டியூப் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
39 பகல் நேர பராமரிப்பு மையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
40 பண்டிகைப் பொருட்களை வாடகைக்கு விடும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
41 வாகனங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
42 குளிர்சாதனப் பெட்டிகளை திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
43 பசளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
44 நிறப் பூச்சுக்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
45 சைக்கிள், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
46 360.00 1,200.00 3,000.00
47 360.00 1,200.00 3,000.00
48 நகைகள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
49 விவசாய இரசாயனங்கள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
50 வங்கிச் சேவைகள் (நிதி நிறுவனம்) நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
51 தன்னியக்க டெலர் இயந்திரம் ஒன்றை பராமரித்துச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
52 அடகுச்சேவை வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
53 குத்தகை சேவை வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
54 அலங்கார மீன்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
55 டிஜிட்டல் மத்திய நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
56 அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
57 அச்சகம் ஒன்றை நடத்துதல் 360.00 1,200.00 3,000.00
58 தொலைபேசி வலையமைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
59 சோளம் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
60 கண்ணாடி விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
61 கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். 360.00 1,200.00 3,000.00
62 உடற்பயிற்சி நிலைம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
63 சங்கீத உபகரணங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
64 பந்தய நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
65 புகைப்படம் எடுத்தல் மற்றும் புகைப்படம் அச்சிடும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
66 பகுதி நேர வகுப்புக்களை நடத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
67 திரையரங்கம் ஒன்றை நடத்துதல் 360.00 1,200.00 3,000.00
68
69 கட்டட நிர்மாணப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
70 உராய்வு நீக்கி மற்றும் இயந்திர எண்ணெய் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
71 போக்குவரத்து சேவைகளை வழங்குதல் 360.00 1,200.00 3,000.00
72 மின் உபகாரணங்களை திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
73 சிமெந்து உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
74 செய்திப் பத்திரிகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
75 ஜோதிட நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
76 இயந்திர சாதனங்கள், மோட்டார் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
77 தரகு நிலையம் ஒன்றை நடத்துதல் 360.00 1,200.00 3,000.00
78 பீங்கான் (செரமிக்) பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
79 குஷன் வேலைத்தளம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
80 அரிசி களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்துதல் 360.00 1,200.00 3,000.00
81 சிசுக்களுக்கான உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
82 ஏனைய பல்வேறு வணிகங்கள் 360.00 1,200.00 3,000.00
83 ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
84 இலத்திரனியல் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00
85 தொலைபேசி கோபுரம் ஒன்றை பராமரித்தல் 360.00 1,200.00 3,000.00
86 குடிநீர் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் 360.00 1,200.00 3,000.00