விளையாட்டு மைதானங்கள் மற்றும் வெற்றுக் காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கும் போது கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

விளையாட்டு மைதானங்கள் மற்றும் வெற்றுக் காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கும் போது கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.

திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான பின்வரும் மைதானங்கள் மற்றும் வெற்றுக் காணிகளை குத்தகை அடிப்படையில் குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்காக, 2023 ஆம் ஆண்டுக்கு கட்டணம் ஒன்றை அறவிட்டு குத்தகைக்கு வழங்குவதற்கும், அந்த இடங்களின் ஒரு பகுதியை மாத்திரம் கோருகின்ற போது கோருகின்ற பகுதிக்கு பொருத்தமானதாக கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கும், தெபரவெவ போது விளையாட்டு மைதானம் மற்றும் பண்ணேகமுவ கொவி செவன விளையாட்டு மைதானத்தை விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கட்டணம் அறவிடப்படாத பொது  நிகழ்வுகளுக்கு கட்டணமின்றி பெற்றுக் கொடுப்பதற்கும், தெபரவெவ போது விளையாட்டு மைதானத்தை கட்டணம் அறவிட்டு வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிணை வைப்பாக ரூ 75,000.00 ஐயும், பண்ணேகமுவ கொவி செவன விளையாட்டு மைதானத்தை கட்டணம் அறவிட்டு வழங்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிணை வைப்பாக ரூ 25,000.00 ஐயும் தடுத்து வைத்து குறித்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மைதானத்திற்கு சேதம் ஏற்படாத போது மாத்திரம் பிணைப் பணத்தை விடுவிக்கும் அடிப்படையில் தெபரவெவ போது விளையாட்டு மைதானம் மற்றும் பண்ணேகமுவ கொவி செவன விளையாட்டு மைதானத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், திஸ்ஸமஹாராம லொறி வண்டி தரிப்பிடத்தை மொத்த நிலப்பரப்பை விட குறைவான பகுதியை வழங்கும் போது ஒரு சதுர அடிக்கு ரூ 5.00 என்ற அளவில் கணக்கிட்டு வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொடர் இலக்கம்  இடம்  கட்டணம் 
1 தெபரவெவ பொது விளையாட்டு மைதானம். 20,000.00 (ஒரு நாளைக்கு)
தெபரவெவ பொது விளையாட்டு மைதானத்திற்கான பிணை வைப்பு (மைதானத்தைப் பயன்படுத்தும் போது அதன் சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் மேற்படி நிதி விடுவிக்கப்படும்) ரூ. 75,000.00
தெபரவெவ பொது விளையாட்டு மைதானத்தை அரச நிறுவனங்கள் தவிர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு விளையாட்டு நிகழ்வுகளுக்காக வழங்குதல். (விளையாட்டு செயற்பாடுகளுக்கு மாத்திரம் என்பதால் சலுகை அடிப்படையில் பிணை வைப்பின்றிய அடிப்படையில்) ரூ. 7500.00 (ஒரு நாளைக்கு)
2 திஸ்ஸமஹாராம லொறி வண்டி தரிப்பிடம்  ரூ. 10,000 (ஒரு நாளைக்கு)
3 சபைக்கு எதிரே உள்ள நிலம்  ரூ. 3,000.00 (ஒரு நாளைக்கு)
4 திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள நிலம்  ரூ 2,000.00 (ஒரு நாளைக்கு)
5 திஸ்ஸமஹாராம பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள நிலம். ரூ 2,0000.00 (ஒரு நாளைக்கு)
6 திஸ்ஸமஹாராம பொதுச் சந்தைக்கு எதிரே உள்ள நிலம்  ரூ 3,000.00 (ஒரு நாளைக்கு)
7 தெபரவெவ சந்தை நிலம்  ரூ. 2,000.00 (ஒரு நாளைக்கு)
8 பண்ணேகமுவ சந்தை நிலம்  ரூ. 2,000.00 (ஒரு நாளைக்கு)
9 பண்ணேகமுவ கொவி செவன  விளையாட்டு மைதானம் (விளையாட்டு அல்லாத வேறு எவ்விதமான கட்டணம் அறவிடும் களியாட்ட நிகழ்வுகள், கூட்டங்கள், இசைக் கச்சேரிகள் போன்றவற்றுக்கு) ரூ. 20,000.00 (ஒரு நாளைக்கு)
பண்ணேகமுவ கொவி செவன  விளையாட்டு மைதானம் (கட்டணம் அறவிடப்படாத எந்தவொரு நிகழ்ச்சிக்கும்.) ரூ. 25,000.00 (பிணை வைப்பு)
பண்ணேகமுவ கொவி செவன  விளையாட்டு மைதானம் (விளையாட்டு அல்லாத எந்தவொரு நிகழ்வுக்கும்) ரூ. 15,000.00 (பிணை வைப்பு)
பண்ணேகமுவ கொவி செவன  விளையாட்டு மைதானத்தை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக அரச நிறுவங்கள் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு வழங்குதல். (விளையாட்டு நிகழ்வுகளுக்காக மட்டும் என்பதால் பிணை வைப்பு சலுகை அடிப்படையில்) ரூ. 5,000.00 (ஒரு நாளைக்கு)

Get In Touch