1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 122 மற்றும் 126 VII ஊ பபிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் 23.08.1988 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 527/7 இலக்கம் கொண்ட அதி விஷேட வர்த்தமானியின் iv (ஆ) பிரிவினால் பகிரங்கப்படுத்தப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க உள்ளூராட்சி அமைப்புக்கள் (துணைச் சட்டத்தின்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆவது உப. பிரிவின் அடிப்படையில், பொறுப்பான அமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள துணைச் சட்டத் தொகுப்பின் 39 ஆவது துணைச் சட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கு அதிகாரப். பிரதேசத்தினுள் காட்சிப்படுத்தப்படும் விளம்பரப் பதாதைகளுக்காக பின்வரும் நியமங்களின் அடிப்படையில் கட்டணங்களை அறவிடல்.
-
- நடப்பாண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சுவர் ஒன்றில் அல்லது பதாகை ஒன்றில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார விளம்பரம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 100.00 என்ற அடிப்படையிலான கட்டணம்.
- துணி அல்லது பொலித்தின் ஐப். பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விளம்பரம் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 30.00 வீதமான கட்டணம்
- கடதாசியின் அச்சிடப்பட்ட விளம்பரம் ஒன்றை மாதம் ஒன்றுக்கு அல்லது அதன் பகுதி ஒன்றுக்கு காட்சிப்படுத்துவதற்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 5.00 வீதமான கட்டணம்.
- நடைமுறை ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சுவர் ஒன்றில் அல்லது பதாகை ஒன்றில் கட்சிப்படுத்தப்படும் டிஜிட்டல் விளம்பரப் பதாகை ஒன்றுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ. 1500.00 வீதம் கட்டணம் அறவிடல்.