1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் 146(1) உப பிரிவின் அடிப்படையில் திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 392/20 ஆம் இலக்கம் கொண்ட, 04/03/1983 ஆம் திகதியுடைய அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தினுள் அபிவிருத்தி செய்யத் தக்க பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களினுள் காணப்படும் வீடுகளில், கட்டடங்களில், காணிகளின் பெறுமதியில் 2007 ஆம் ஆண்டுக்காகவும் நடைமுறை ஆண்டு 2023 க்காகவும் நிறைவேற்றக் கொள்ளப்பட வேண்டும் எனவும், அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் 134(1) உப பிரிவினால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மேற்படி சொத்துக்களின் மீது மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுக்கு வருடாந்த பெறுமதியில் 7% ஆன இறைவரி ஒன்றை விதித்து அறவிட வேண்டும் என்றும்,
மேலும் 2023 ஆம் ஆண்டில் பின்வரும் ஒவ்வொரு காலாண்டிற்கும் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் இறைவரியினை திஸ்ஸமஹாராம பிரதேச சபை நிதியத்துக்கு செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு வருடாந்த இறைவரியினை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னர் செலுத்தினால், வருடாந்த இறைவரிக் கட்டணத்தில் 10% கழிவும், அந்த உப பட்டியலில் ஒவ்வொரு காலாண்டுக்கும் 3 ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் இறைவரித் தொகையை பிரதேச சபை நிதியத்தில் செலுத்துவதன் மூலம் குறித்த காலாண்டுக்கு உரிய தொகையில் 5% கழிவையும் திஸ்ஸமஹாராம பிரதேச சபை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
காலாண்டு | செலுத்தப்பட வேண்டிய திகதி | 5% கழிவுக்கு உரித்தான இறுதித் திகதி |
---|---|---|
முதலாம் காலாண்டு | 31/03/2023 | 31/01/2023 |
இரண்டாம் காலாண்டு | 30/062023 | 30/04/2023 |
மூன்றாம் காலாண்டு | 30/09/3023 | 31/07/2023 |
நான்காம் காலாண்டு | 31/12/2023 | 31/10/2023 |